×

பாகிஸ்தான் கொடிகளை விற்பனை செய்வதாக கூறி நாக்பூர் ‘அமேசான்’ ஆபீஸ் சூறை

நாக்பூர்: மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் அடுத்த கணேஷ்பேத் பகுதியில் பிரபல இ-காமர்ஸ் ஆன்லைன் விற்பனை தளத்தின் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் இருந்து இந்துக்களின் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் பாகிஸ்தான் கொடிகள் மற்றும் புத்தகம் விற்பனை செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. அதையடுத்து மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா அமைப்பினர், நாக்பூரில் செயல்பட்டு வரும் அமேசான்-இந்தியா என்ற நிறுவனத்திற்குள் புகுந்து அங்கிருந்த பொருட்களை சூறையாடினர். மேலும் ‘வந்தே மாதரம்’ என்று கோஷங்களை எழுப்பிய அவர்கள், அந்த அலுவலகத்திற்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இதுகுறித்து நாக்பூரைச் சேர்ந்த எம்.என்.எஸ் தலைவர் சந்து லாடே கூறுகையில், ‘பகவத் கீதையை இழிவுபடுத்தும் வகையில் ‘கொடிய பகவத் கீதை’ என்ற புத்தகத்தை அமேசான் வலைத்தளம் விற்பனை விளம்பரம் செய்துள்ளது. அதனால் அந்நிறுவனம் இ-காமர்ஸ் பக்கத்தில் இருந்து அந்தப் புத்தகத்தை நீக்க வேண்டும். அந்த புத்தகத்தை விற்பனை செய்யக்கூடாது. பாகிஸ்தான் கொடிகளை விற்பனை செய்யக் கூடாது. இதுதொடர்பாக அமேசான் – இந்தியா லிமிடெட் நிறுவனத்திற்கு கடிதம் எழுதியுள்ளோம்’ என்றார். இந்நிலையில் நாக்பூரில் செயல்படும் அமேசான் – இந்தியா சூறையாடிய சிலர் மீது போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர்.

The post பாகிஸ்தான் கொடிகளை விற்பனை செய்வதாக கூறி நாக்பூர் ‘அமேசான்’ ஆபீஸ் சூறை appeared first on Dinakaran.

Tags : Nagpur ,Amazon ,Ganeshpet ,Nagpur, Maharashtra.… ,Dinakaran ,
× RELATED கனடா விசா பெற்று தருவதாக அமேசான்...